முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் திருமாவளவன் சந்திப்பு!

 
thiruma stalin thiruma stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். 

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்தார். 
ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வழங்கிய நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் வழங்கினார்.. ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். தலைமை  செயலகத்தில் நடந்த "சட்டமன்ற நாயகர் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு மலர்" வெளியீட்டு நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா புத்தக வெளியீட்டு விழாவில் திமுக குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார். இது திமுக-விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்துள்ளார்.