அயோக்கியத்தனம் செய்த சீமானின் முகத்திரையை கிழித்திடுவோம்- திருமுருகன் காந்தி
ஈழ ஆதரவு அரசியலை மடை மாற்றிய அயோக்கியத்தனத்தை செய்த சீமான், தந்தை பெரியாரை பற்றி மேலும் பொய் பரப்புரை செய்தால் நேரடியாக எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
![]()
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “தமிழகத்தில் ஆயுதத்தை தூக்கி பாருங்கள், அதற்கு தமிழகம் பதில் சொல்லும். அண்ணாமலை, அர்ஜுன் சம்பத்,H.ராஜா உள்ளிட்டோர் வன்முறையை தூண்டும் விதமாக பேசுகிறார்கள். வன்முறை மூலமாக தமிழகத்தில் அரசியல் செய்ய நினைப்பவர்கள் வால் ஓட்ட வெட்டப்படும்.
பெரியாரின் மேடையை பயன்படுத்தி விட்டு, தமிழ்நாடு முழுவதும் அரசியல் மேடைகளில் ஏறி பெரியாரியத் தொடர்கள், பெரியார் செயல்பாட்டாளர்கள் உருவாக்கிய நாம் தமிழர் கட்சியினுடைய தலைமை ஆக்கிரமித்துவிட்டு இன்றைக்கு பெரியாருக்கு எதிராக கொச்சையாக பொய்யான விஷயங்களை, பாரதிய ஜனதா கட்சி பரப்பும் பொய்களை எல்லாம் நாம் தமிழர் கட்சியினுடைய தலைமையில் உள்ள சீமான் பரப்பிக் கொண்டிருக்கிறார். இதனை நாங்கள் பார்த்துக் கொண்ட அமைதியாக இருக்க மாட்டோம். தமிழ்நாட்டில் மேலும் பொய் பரப்பரைகளில் சீமான் செய்தால் அது எங்கே எப்படி கையாள வேண்டுமோ, அப்படி கையாளுவோம்.

15 ஆண்டுகளாக ஈழப்படுகொலையை வைத்து ஈழத் தமிழர்களையும் தமிழக தமிழர்களையும் ஈழ அரசியலையும் மண்ணோடு மண்ணாக மக்க செய்கின்ற வேலையை செய்த சீமானுக்கு இதை வைத்து பிழைப்பு நடத்திய சீமானுக்கு, தந்தை பெரியாரைப் பற்றி பேசுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது. சீமானின் முகத்திரையை கிழிக்க ரொம்ப நேரம் ஆகாது. ஈழ ஆதரவு அரசியலை மடை மாற்றிய அயோக்கியத்தனத்தை செய்த சீமான் தந்தை பெரியாரை பற்றி மேலும் பொய் பரப்புரை செய்தால் நேரடியாக எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம் என்று நான் சீமானுக்கு எச்சரிக்கை விடுகின்றேன்” என்றார்.


