உத்தரவிட்ட 24 மணி நேரத்திற்குள் அதிரடியில் இறங்கிய நீதிபதி.. நேரடியாக திருப்புவனம் ஸ்டேஷனுக்குள் என்ட்ரி

 
ச் ச்

திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி விசாரணை  இறந்த அஜித்தின் வழக்கை விசாரிக்க நீதிபதி ஜான் சுந்தர் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு வருகை தந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் ஜூன் 27ம் தேதி கோயிலுக்கு வந்த  பக்தர் சிவகாமி என்பவரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் தங்க நகை மற்றும் 2500 ரூபாய் ரொக்கம் காணாமல் போன சம்பவத்தில் மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் (30) உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் பெலிக்ஸ் சுரேஷ் தலைமையில் விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டனர். நீதிபதி ஜான் லால் சுரேஷ் இன்று காலை 10.30 மணிக்கு திருப்புவனம் காவல்நிலையம் அருகே உள்ள பயணியர் மாளிகைக்கு வந்தார். வழக்கு விசாரணைக்கு தேவையான கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள் கொண்டு வரப்பட்டன. பத்திரிக்கையாளர்கள் தொந்தரவு செய்ய வேண்டாம் என கேட்டு கொண்டார்.  

விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி சுகுமார் வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிபதியிடம் அளித்தார். சுமார் 30 நிமிடம் விசாரணை நடந்தது. வெளியே வந்த ஏடிஎஸ்பியை மீண்டும் நீதிபதி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார். டிஎஸ்பி அமல அட்வின், இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ஆகியோரிடம் விசாரனை நடத்திய பின் திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் கோயில் கோசாலை ஆகிய இடங்களில் விசாரணை நடத்த உள்ளார்.