தமிழில் பெயர் பலகை...இல்லையென்றால் அபராதம் - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அதிரடி

 
thiruvannamalai thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி - கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழில் பெயர்ப்பலகை வைப்பவர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் குறிப்பிடப்படும் வார்த்தைகளை தமிழ் எழுத்தை விட சிறிய அளவில் வைக்க வேண்டும்.

வருகின்ற மே 15ம் தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும். பிற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.