தி.மலை கார்த்திகை தீபம் - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

 
train train

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு டிச.3ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு நெல்லையில் இருந்து தி.மலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Karthigai Deepam 2024 in Tiruvannamalai: A Stunning Photographic Journey

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் நெரிசல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், போதுமான  அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நெல்லை, மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட தொலைத்தூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி WWW.tnstc.in மற்றும் TNSTC மொபைல் APP மூலமாக டிக்கெட்களை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு டிச.3ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு நெல்லையில் இருந்து தி.மலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மறு மார்க்கமாக டிச.4ஆம் தேதி இரவு 7.55 மணிக்கு தி.மலையிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கம் இயக்கப்படும். அதேபோல் நவ.30, டிச.3, 4, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்திலிருந்து தி.மலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் என்றும் டிச.3, 4, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்திலிருந்து தி.மலை வழியாக வேலூருக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.