ஆம்ஸ்ட்ராங்கை பின்னால் இருந்து வெட்டிய திருவேங்கடம்! நடுங்க வைக்கும் சிசிடிவி

 
திருவேங்கடம் திருவேங்கடம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கூடுதல் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீடு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா, குன்றத்தூர் திருவேங்கடம் சந்தோஷ், செல்வராஜ் திருமலை உள்பட 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில் கொலையாளிகள் 11 பேரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர். கொலையாளிகளில் ஒருவரான குன்றத்தூர் திருவேங்கடத்தை வழக்கு விசாரணை தொடர்பாக கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் புழல் நோக்கி அழைத்துச் சென்றனர். மாதவரம் ஆடு தொட்டி அருகே சென்றபோது போலீசாரின் பிடியிலிருந்து திருவேங்கடம் தப்பி ஓடிவிட்டார். அவரை இன்று அதிகாலை போலீசார் என்கவுன்டர் செய்தனர்.


இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கூடுதல் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கும் காட்சி மற்றும் அவரைக் கொல்ல நோட்டமிட்ட சிசிடிவி காட்சிகளில் கைதானவர்கள் இடம்பெற்றுள்ளனர். என்கவுன்டரில் சந்தேகம் இருப்பதாகவும், வழக்கை திசை திருப்புவதாகவும் எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பிய நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ராங்க் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளின் சிசிடிவி காட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.