திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி வள்ளலார் நெடுஞ்சாலை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வள்ளலார் நெறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “புதிய அறிவிப்பு: திருவொற்றியூர் நெடுஞ்சாலை, இனி வள்ளலார் நெடுஞ்சாலை! நமது #DravidianModel-இல்,
🔹வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்
🔹ஓராண்டு தொடர்கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா
🔹வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என
வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல்நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளைக் கொண்டு சேர்த்திட, வரும் பிப்ரவரி 15-ஆம் நாள் சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 நடத்தப்படும் என்றும், மேலும், வள்ளலார் நெறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


