கமல்ஹாசன் நலமுடன் இருப்பதற்கான காரணம் இதுதான்

 
k

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அதுகுறித்து பலரும்விமர்சித்து வரும் நிலையில்,  இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டதால்தான் அவர் கொரோனாதொற்று பாதித்த போதிலும் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன்.

கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கமல்ஹாசன்.  ஆனாலும் அவர் உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்றும், தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.   கமலஹாசன் நலமுடன் இருப்பதற்கான காரணம் இதுதான் என்றும் இதை தொடர்ந்து அனைத்து தரப்பினருக்கும் இதை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதிரடி காட்ட போவதாக சொல்லியிருக்கிறார்.

ma

 அமெரிக்காவுக்கு சென்று விட்டு திரும்பிய நடிகர் கமல்ஹாசனுக்கு இருமல் இருந்ததை அடுத்து அவர் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.  இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.   அங்கேயே அவர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

 இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,   கமல்ஹாசன் 2 நோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருப்பதால்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு வந்தபோதிலும் அவர் நலமுடன் இருக்கிறார்.  அவர் விரைவில் வீடு திரும்ப இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.  மேலும்,  தடுப்பூசி போடுவதன் அவசியத்தை இதன் மூலமாக மக்கள் இன்னும் உணர்ந்து,  இதன் மூலம் மக்கள் இன்னும் விழிப்புணர்வு பெற்று தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும்,  புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று  பரவாமல் தடுப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அதனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தொற்று பரிசோதனை செய்யப்படுவது குறித்தும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.