இதுதான் தங்கம் வாங்க சரியான நேரம்.. ஒரே நாளில் அதிரடி விலைக் குறைவு..

 
gold gold

தங்கம் விலை அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 560 சரிந்து ஒரு சவரன் 56,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, ரஷ்யா- உக்ரைன் மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. அவ்வப்போது தங்கத்தில் விலை குறைவது போல போக்கு காட்டி வந்தாலும், கணிசமாக  விலை ஏற்றம் கண்டிருப்பதை காண முடியும். 

gold

கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை,  கடந்த 4ம் தேதி புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ. 56,960க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் வெள்ளி விலையும் புதிய உச்சமாக கிராம் ரூ.103க்கு விற்கப்பட்டது.  அதன்பிறகு விலை குறைவதும், உயர்வதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது.  

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 குறைந்து, ஒரு கிராம் 7,030 ரூபாய்க்கும்,  ஒரு சவரன்  56,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.100க்கு விற்கப்படுகிறது.