இந்திய அணிக்கு டார்கெட் இதுதான்..!

 
Q Q

இந்திய அணிக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான். டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடர்ந்து பாகிஸ்தானின் தொடக்க வீரர்களாக சாஹிப்சாதா பர்ஹான் மற்றும் சைம் அயூப் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாஹிப்சாதா பர்ஹான் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

இதில் முகமது ஹாரிஸ் 3 ரன், பக்கார் ஜமான் 17 ரன், சல்மான் ஆகா 3 ரன், ஹசன் நவாஸ் 5 ரன் எடுத்து அவுட் ஆகினர். சைம் அயூப், முகமது நவாஸ் இருவரும் ரன் எடுக்காமல் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்களில் அவுட் ஆனார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், அக்சர் படேல், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 128 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆட உள்ளது.