சேலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியவர்கள் கைது!

 
tn

சேலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். 

சேலம் பெரியார் பல்கலைக்கழக எஸ்சி/எஸ்டி  பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2.66 கோடி நிதியில் ஊழல் நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட  பல்கலைக்கழக பட்டியலின மாணவர்கள் சாரிபில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மோசடி, கூட்டு சதி, கொலை மிரட்டல், எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டப்பிரிவு ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளார். 

இந்த நிலையில், மோசடி வழக்கில் ஜாமினில் வெளியே வந்துள்ள சேலம் பெரியார் பழகலைக் கழக வேந்தர் ஜெகநாதனை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் சென்றார். சேலம் பெரியார் பல்கலைக்கழக மோசடி வழக்கில் ஜாமினில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை, ஆளுநர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த மாணவர் இயக்கங்கள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி காட்டினர். இந்த நிலையில்,  சேலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.