3 மணி நேர பேச்சுவார்த்தை.. B2 ராணுவ விமானங்களை பறக்கவிட்ட அமெரிக்கா - அசந்துபோன புதின்..

 
3 மணி நேர பேச்சுவார்த்தை.. B2 ராணுவ விமானங்களை பறக்கவிட்ட அமெரிக்கா - அசந்துபோன புதின்.. 3 மணி நேர பேச்சுவார்த்தை.. B2 ராணுவ விமானங்களை பறக்கவிட்ட அமெரிக்கா - அசந்துபோன புதின்..


அலாஸ்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையிலான  மூன்று மணி நேர பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் நிறைவு பெற்றது.   

ரஷ்யா  - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அலாஸ்கா மாகாணத்தில் உள்ள எல்மன்ட்டோ ஆஃப் ரிச்சர்ட்ஸ் அண்ட் ராணுவ படைத்தளத்தில் ரஷ்ய அதிபர் புதினுடன்,  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தைக்காக அலாஸ்கா வந்தடைந்த புதினுக்கு  B2 Bomber , F24 போர் விமானங்கள் பறக்க அமெரிக்க அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  அப்போது செய்தியாளர்கள் புதினை நோக்கி,  “பொதுமக்களை ஏன் கொலை செய்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினர். ஆனால் புதினோ கேள்வி  காதில் விழவில்லை என்பது போல செய்கை செய்து காட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.  தொடர்ந்து அதிபர் ட்ரம்ப்பின் பீஸ்ட் என அழைக்கப்படும் அவருடைய கேடில் ஆஃப் லிவோசி காரில் , புதின் பயணித்தார்  

putin and jelanski

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா தரப்பில் சரிசமமான  எண்ணிக்கையில்  அதிகாரிகள் கலந்து கொண்டனர். 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது  அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘ஆக்கபூர்வமான சந்திப்பு நடைபெற்றது.   பல விஷயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டது.   மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதை தாங்கள் நிறுத்தப் போகிறோம். இரண்டு விஷயங்களில் முழுமையாக ஒப்புதல் ஏற்படவில்லை என்றாலும், பேச்சுவார்த்தையில்  குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஒப்பந்தம் கையெழுத்தாகாத வரை எதுவும் முடியவில்லை”என்று தெரிவித்தார். 

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் புதின், “போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது .  மேலும் ட்ரம்ப் உடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.  உக்ரைன் உடனான பிரச்சனைக்கு மூல காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் . அதேபோல் உக்கரனில் அமைதியை கொண்டு வர வேண்டும். உக்ரைனில் உள்ள குடியேற்றங்கள் தான் இந்த பிரச்சினைக்கு மூல காரணமாக உள்ளது என்பதை நாங்கள் ட்ரம்புக்கு உணர்த்தினோம். இதுகுறித்து தான் நாங்கள் விவாதித்தோம்” என்று தெரிவிதார்.   மேலும் அடுத்த சந்திப்பை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்த வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் விருப்பம் தெரிவித்தார்.  இந்த சந்திப்பை தொடர்ந்து இரண்டாம் உலகப்போரின் போது உயிரிழந்த சோவியத் வீரர்களின் நினைவிடத்தில் மலர் வைத்து மரியாதை செலுத்திவிட்டு, அதிபர் புதின் ரஷ்ய புறப்பட்டுச் சென்றார்.