கர்நாடகாவில் வெளியாகாத ‘தக் லைஃப்’.. ஓசூருக்கு படையெடுத்த ரசிகர்கள்..

 
ஓசூர் திரையரங்கம் ஓசூர் திரையரங்கம்


கமல்ஹாசனின்  ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாததால் அவரது ரசிகர்கள் ஓசூருக்கு படையெடுத்துள்ளனர். 

Image

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, அபிராமி, சிலம்பரசன் ஆகியோர் நடித்திருக்கும் 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகா தவிர உலகம் முழுவதும் இன்று (ஜூன் 5ஆம் தேதி) வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், 'கன்னட மொழி தமிழில் இருந்து தோன்றியது' என கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. கர்நாடக மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அந்த மாநிலத்தில் மட்டும் ஜூன் 5ம் தேதி படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கமல் மற்றும் சிம்பு ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 

தக் லைஃப்

இருப்பினும் கர்நாடக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ‘தக் லைப்’ திரைப்படம் வெளியாகி இருப்பதால் கர்நாடகா மாநிலத்தின் தும்கூர், மண்டியா, பெங்களூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த கமல் ரசிகர்கள் ஒசூருக்கு படையெடுத்துள்ளனர்.. திரையரங்குகளுக்கு முன்பாக  பட்டாசு வெடித்து, டிஜே நிகழ்ச்சிகள்,  ஆட்டம் பாட்டம் என தக் லைஃப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.