கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீஸ் இல்லை
கர்நாடகாவில் வரும் 5-ம் தேதி 'தக் லைப்' ரிலீஸ் இல்லை என கர்நாடக ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

கன்னட மொழி விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் பேசிய கருத்து சர்ச்சையில், ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்துள்ள நிலையில், பிரச்சனையை தீர்த்துவிட்டு கர்நாடகாவில் தக் லைஃப் வெளியிடப்படும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேசமயம் கர்நாடகாவில் தக் லைஃப் பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மன்னிப்பு கேட்பதில் என்ன சிக்கல் என நீதிமன்றம் கேட்டபோதும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை. பட வெளியீடு குறித்து கர்நாடக ஃபிலிம் சேம்பருடன் கலந்து பேச இருப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்த நிலையில், வரும் ஜூன் 10-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


