தூத்துக்குடியில் திக் திக் நிமிடங்கள்! தீப்பற்றிய அரசு பஸ்: பயணிகள் 60 பேர் உயிர் தப்பினர்..!
Mar 22, 2026, 05:10 IST1774136435000
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு ஒன் டு ஒன் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. வாகைகுளம் அருகே சென்று கொண்டிருந்த போது, பஸ்ஸில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்து சுதாரித்துக் கொண்ட பயணிகள், அலறியபடி பஸ்ஸில் இருந்து வெளியேறினர். இதனால், அதிர்ஷ்டவசமாக பயணிகள் 60 பேர் உயிர்தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். பஸ்ஸில் தீப்பிடித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

