செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற கால அவகாசம்
வரும் 24ம் தேதிக்குள் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிப்பதாக அறிவித்திருந்த நிலையில் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவதற்குரிய காலக்கெடு வரும் 23 ஆம் தேதியுடன் நிறைவடைவதாக சென்னை மாநகராட்சி முன்பு அறிவித்திருந்தது. அதன்படி, வரும் 24ம் தேதிக்குள் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கான உரிமத்தை பெற மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோ சிப் பொருத்துதல் கட்டாயமாகும். சென்னை மாநகராட்சி செயலியில் செல்லப்பிராணிகளின் புகைப்படத்துடன் விவரங்களை பதிவேற்றம் செய்த பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்து செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற்று கொள்ளலாம்.


