திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்- லட்சக்கணக்கானோர் குவிந்தனர்

 
ச்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள்  குவிந்தனர்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா நவம்பர் 2ஆம் தேதி துவங்கியது ஆறு நாட்கள் விரதம் இருந்து ஆறாம் நாளான இன்று மாலை 4 மணிக்கு நடைபெறக்கூடிய சூரசம்கார நிகழ்ச்சியை காண்பதற்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அதிகாலை முதலே திருச்செந்தூரை நோக்கி சாரை சாரையாக பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர் மக்கள் போக்குவரத்தை சரி செய்வதற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் 20 வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அது மட்டுமல்லாமல் அத்தியாவசிய தேவைகளான குடிநீர் மருத்துவம் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக நகரும் கண்காணிப்பு கேமரா மற்றும் நிலையான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது மக்கள் கடலில் நீராடும் போது பாதுகாப்பாக இருப்பதற்கு கடலோர பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மாலை நடைபெறக்கூடிய சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண்பதற்கு தற்போது இருந்தே கடற்கரையில் மக்கள் காத்திருக்கின்றனர். சூரசம்கார நிகழ்ச்சி பார்த்து இனிய கடலில் நீராடி சென்றால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை குழந்தை வரம் வேண்டி 10 ஆண்டுகளாக கோவிலுக்கு வந்த பிறகு இரட்டை குழந்தையை கொடுத்ததாக நெகிழ்ச்சியுடன் கூறும் பக்தர்கள் என வேண்டியதை நிறைவேற்றிக் கொடுக்கும் முருகனை வருடம் தோறும் சூரசம்கார நிகழ்ச்சியை காண்பதற்கு எங்கிருந்தாலும் வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.