சாதி அடையாளங்களுடன் திருச்செந்தூர் செல்ல தடை
தைப்பூச திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நாளை தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆறுபடை வீடுகளிலும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருநாள் அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவது வழக்கம். இதேபோல் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தைப்பூச திருநாளையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதர்காக வருவார்கள்.
இந்த நிலையில், தைப்பூச திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சாதி ரீதியிலான உடைகள் அணியவோ, சர்ப்பக் காவடி எடுத்து செல்லவோ போலீசார் தடை விதித்துள்ளனர்.


