நெல்லை: உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு..!!

 
  துப்பாக்கிச்சூடு:   துப்பாக்கிச்சூடு:


திருநெல்வேலி காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற 17 வயது சிறுவன்  மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

திருநெல்வேலி பாப்பாகுடி பகுதியில் நேற்று இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.  இதுகுறித்து தகவல் அறிந்த ரோந்து பணியில் இருந்த  காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் இரண்டு போலீஸார் இருந்த தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  அப்போது கையில் அரிவாலுடன் வந்த இரண்டு சிறுவர்கள் காவலர்களை வெட்ட முயன்றுள்ளனர். இதனையடுத்து உடனடியாக சுதாரித்துக்கொண்டு தான் பாதுகப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். 

நெல்லை:  உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு..!!

இதில் சிறுவனின்  வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில்,  அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், சிறுவர்கள் காவல்துறையினரை வெட்ட முயன்றபோது அவர்கள் அருகாமையில் உள்ள  வீட்டுக்குள் தஞ்சமடைந்ததாகவும், அப்போதும் சிறுவர்கள் கொல்ல முயற்சித்ததால் அவ்வீட்டிருந்த பெண்களின் பாதுகாப்பு கருதியும், தற்காப்புக்காகவும் துப்பாக்கிச்சூழு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.