பெரும் சோகம்! ரயில் முன் பாய்ந்து கணவன், மனைவி தற்கொலை!

 
Train Train

திருப்பத்தூர் அருகே ரயில் முன் பாய்ந்து கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியை சேர்ந்த குமார், கவிதா தம்பதியினர் தங்களது 17வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததுள்ளனர். இது தொடர்பாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், குழந்தை திருமணம் தொடர்பாக பெற்றோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் பெற்றோர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர். இதனிடையே முன் ஜாமின் வாங்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செல்வதாக வீட்டைவிட்டு வெளியேறிய இருவரும் வீடு திரும்பவில்லை. 
இந்த நிலையில், திருப்பத்தூர் அருகே கீழ் குறும்பர் தெரு பகுதியில், ரயில் முன் பாய்ந்து கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். முன் ஜாமின் வாங்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற நிலையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சிதறி கிடந்த உடல்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.