"படம் வெளியான முதல்நாளே நெகடிவ் ரிவ்யூ கொடுத்து அடித்து துவைத்துவிடுகிறர்கள்"... யூடியூபர்களுக்கு கடிவாளம்

 
ச்

இந்தியாவில் ஒரே நேரத்தில் தமிழ் படங்கள் வெளியியாவதையும், தரக்குறைவான திரைப்பட விமர்சனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களின் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கட்டணம் உயர்த்தப்பட்டால் திரையரங்குக்கு வருவோரின் எண்ணிக்கை குறையும்: திருப்பூர்  சுப்பிரமணியம் | If Fares are Hiked, Theater Attendance will Fall: Tiruppur  ...


திரையரங்கு உரிமையாளர்களின் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் ஆடியோ பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சமீப காலமாக நாம் சந்திக்கும் சில முக்கிய சவால்களைப் பற்றி உங்களுடன் பகிர விரும்புகிறேன் என தொடங்கும் அவர், இப்போது தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்கள் காலை 9 மணிக்கே சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகின்றன. ஆனால் பிற மாநிலங்களில், குறிப்பாக கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கே காட்சிகள் தொடங்குகின்றன. இது தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகள் மற்றும் நம்முடைய ரசிகர்கள் மீதான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில், காலை 9 மணிக்கு தான் சிறப்பு காட்சிகள் திரையிட வேண்டும் என்பதற்காக  நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றார். 

இது அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் ஒரு நியாயமான திட்டமாக இருக்கும். திரையரங்குகளில் படங்களை திரையிடுவதில் ஒரே விதமான நடைமுறைகள் இருந்தால், அது திரைத் துறையின் வளர்ச்சிக்கே நன்மையாக இருக்கும். மேலும், சமூக ஊடகங்களில், குறிப்பாக யூடியூப் மற்றும் பிற தளங்களில், சில விமர்சகர்கள் படங்களை வெளியான நாள்  அன்று விமர்சிக்கிறார்கள். சிலர், சில நேரங்களில், மிகவும் எதிர்மறையான விமர்சனங்களை பதிவிடுகிறார்கள். இது ரசிகர்களை படம் பார்க்க விரும்பாதவர்களாக மாற்றி விடுகிறது. உதாரணமாக, சமீபத்தில் வெளியான கங்குவா படத்தை மாலை 4 மணி காட்சியில் பார்த்த ஒருவரின் விமர்சனத்தை முன்வைக்கிறேன். அவருக்கு படம் பிடிக்காமல் இருந்ததால் நெகட்டிவ் விமர்சனம் கொடுத்தார், ஆனால் ரசிகர்கள் மத்தியில் அதன் தாக்கம் மிகவும் பெரியதாக இருந்தது. சில முன்னணி இயக்குனர்கள் தயாரித்த படங்களும் ஆரம்பத்தில் எதிர்மறையான விமர்சனங்களால் பாதிக்கபட்டது போல தோன்றும். ஆனால், மக்கள் படத்தைப் பார்த்த பிறகு அவர்கள் கருத்து மாறியதைக் கண்டோம். சேது, ஒரு தலை ராகம், 16 வயதினிலே, அன்னக்கிளி போன்ற படங்கள் தொடக்கத்தில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும், பின்னர் மாபெரும் வெற்றிப் படங்களாக மாறின. எனவே, விமர்சகர்களின் முதல் நாள் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு மக்கள் திரைப்படங்களை மதிப்பீடு செய்வது முறையல்ல. இந்த மாதிரியாக 100 உதாரணம் என்னால் சொல்ல முடியும். 

அப்படி இருக்கும் பொழுது இவர்கள் காலையில் படம் பார்த்தவுடன் காதில் இருந்து ரத்தம் வந்தது, காது தொங்குகிறது என வாயில் வந்த எல்லாத்தையும் சொல்லி விடுகிறார்கள். இவர்களுக்கு திரை நடிகர்கள் பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம். உண்மையிலேயே இந்த வருடம் மிகப்பெரிய பாதிப்பை திரை துறையைச் சார்ந்த நாம் தயாரிப்பாளர், விநியோகஸ்தார்கள், திரைப்பட உரிமையாளர் , இந்தியன் 2 ,வேட்டையன் இன்றைக்கு கங்கா நான் குறிப்பிட்ட மாதிரி இன்னும் நிறைய படங்களை சொல்ல முடியும். சமீபத்தில் வெளியான படங்கள் வசூலில் குறைந்த மிகப்பெரிய காரணம் விமர்சகர்களும் விமர்சனமும் தான். திரையரங்கம் உள்ளே நின்று கொண்டு சில ரசிகர்களை வைத்துக்கொண்டு உருவாக்குகிறார்கள். அவர்கள் பேசக்கூடிய வார்த்தைகள் காது கொடுத்து கேட்க முடியாத அளவில் இருக்கும். 

kanguva

இயக்குனர்களையும் திரை பிரபலங்களையும் பேசக்கூடிய விதம் மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது. அதேபோல் இருக்கக்கூடிய விமர்சகர்கள் நடிகர்களைப் பற்றியும் ஒவ்வொரு படத்தைப் பற்றியும் விமர்சித்திட்டு வருகின்றனர். ஒவ்வொரு திரைப்படம் எடுப்பதற்கும் கோடி கணக்கில் செலவழித்து வருகின்றனர். சினிமா தொழில் இன்று எவ்வளவு கஷ்டத்தில் இருக்கின்றது தெரிந்தவர்களுக்கு புரியும். திரைப்பட தயாரிப்பாளர்கள் கோடி கணக்கில் செலவழித்து திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். ஆனால், சில விமர்சகர்கள், சினிமா துறையில் உள்ளவர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர். இது திரைத்துறையில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் மனஉளைச்சல் மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகிறது.  எனவே, நம் திரைப்பட தொழில்துறையின் நலனுக்காக, விமர்சகர்கள் அதிக எச்சரிக்கையுடன் மற்றும் பொறுப்புடன் அவர்களுடைய விமர்சனங்களை வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். சமூக ஊடகங்களில் கண்டிப்பாக ஒரு தரப்பை தவறாக தாக்கும் விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் அனைவரும் ஒன்றுகூடி, துரிதமாக நடவடிக்கை எடுத்து, நமது தமிழ் திரை உலகத்தை பாதுகாப்பதற்கு மற்றும் அதன் வளர்ச்சிக்கு உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என பேசியுள்ளார்.