திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றறிக்கை உண்மைக்கு புறம்பானது!!

 
tn

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆயுத பூஜையை முன்னிட்டு மதம் சார்ந்த சாமி புகைப்படமோ, சிலையோ வைக்க கூடாது என கல்லூரி முதல்வர் சுற்றறிக்கை அனுப்பியதாக வலம் வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.

tn

கடந்த சில தினங்களுக்கு முன்பு  திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றிக்கை என்ற பெயரில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி எதிர்வரும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடும் நிகழ்வில் எந்த ஒரு மதத்தைச் சார்ந்த சாமி புகைப்படம்/ சிலை வடிவில் பயன்படுத்தக் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனை வார்டு பிரிவுகளில் ஏதேனும் சாமி புகைப்படம்/சிலைகள் இருப்பின் எதிர்கால பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக அகற்றி விட இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

tn

இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் எந்த விதமான சுற்று அறிக்கையும் வெளியிடப்படவில்லை தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது இது உண்மைக்கு புறம்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது