வரலாற்று நாயகர் திருப்பூர் குமரன் தியாகத்தை நினைவில் கொள்வோம் - தினகரன் ட்வீட்

 
ttv ttv

திருப்பூர் குமரன் அவர்களின் தியாகத்தை என்றென்றும் நினைவில் கொள்வோம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

kumaran

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமூகவலைத்தள பக்கத்தில், இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களால் தாக்கப்பட்டு உயிர் போகும் நிலையிலும் தன் கடைசி நொடி வரை இந்திய தேசிய கொடியை உயர்த்திப் பிடித்து கொடிகாத்த குமரன் என அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்தநாள் இன்று.

tn

அடக்குமுறைகளுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடும் ஒவ்வொரு இந்தியனுக்கும் முன்னோடியாக திகழும் வரலாற்று நாயகர் திருப்பூர் குமரன் அவர்களின் தியாகத்தை என்றென்றும் நினைவில் கொள்வோம். என்றுகுறிப்பிட்டுள்ளார்.