திருவள்ளூர்: 8 மணி நேர கடும் போராட்டம்.. ரயிலில் பற்றிய தீ முழுவதும் அணைப்பு..
திருவள்ளூரில் டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்து 8 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு முழுமையாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது,
சென்னை மணலில் உள்ள ஐ.ஓ.சி.எல் பகுதியில் இருந்து 52 டேங்கர்கள் மூலம் டீசல் நிரப்பப்பட்டு இன்று அதிகாலை
சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்ட சரக்கு ரயில் , திருவள்ளூர் ஏகாட்டூர் இடையே இன்று அதிகாலை 5:30 மணியளவில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 18 டேங்கர்களும் தீப்பிடித்து எரிந்து 12 லட்சத்து 60 ஆயிரம் லீட்டர் கொள்ளளவு கொண்ட 12 கோடி மதிப்பிலான டீசல்கள் எரிந்து முழுமையாக நாசமானது,
டேங்கர் லாரிகள் தீப்பிடித்து கொழுந்து விட்டு எறிய தொடங்கியதால் வரதராஜபுரம் இருளர் குடியிருப்பு பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் சென்னை மார்க்கத்தில் காலை ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டதால், மாநில போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன
மேலும் கரும்புகை 10 கிலோமீட்டர் தொலைவில் படர்ந்ததால் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளால் உள்ள மக்கள் விரைந்து மருத்துவம் பார்க்கும் வசதிக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார்படுத்தப்பட்டன,தீயை அணைக்க திருவள்ளூர் ,காஞ்சிபுரம் செங்கல்பட்டு, 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வர வைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மாநில பேரிட மீட்பு படையினர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் என நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் இணைந்து ரசாயனம் கலந்த நுரையை(ஃபோம்) பீய்ச்சி அடித்து 8 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்,

தீ முழுவதும் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்ட தொடர்ந்து அப்பகுதியில் தண்டவாளப் பகுதியில் விழுந்துள்ள 18 டேங்கர்களை இரண்டு ஜேசிபி இயந்திரம் மூலமாக முழுமையாக அப்புறப்படுத்தும் பணிகளை ரயில்வே துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பகுதியில் தீ விபத்தில் உயரத்த மின் கம்பிகள் சேதமடைந்து இருப்பதால், அதனை சீரமைக்கும் பணிகளை ரயில்வே எலெக்ட்ரிக்கல் பிரிவு ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். எக்ஸ்பிரஸ் ரயில் செல்லக்கூடிய இரண்டு வழித்தடங்கள் சுமார் 300 மீட்டர் தொலைவிற்கு சேதமடைந்து இருப்பதால் அதை சீரமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.
சம்பவம் நடந்த இடத்தில் இன்று காலை அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பு சீனிவாச பெருமாள் , சென்னை கோட்டை மேலாளர் விஸ்வநாத் ஈரையா , ரயில்வே பாதுகாப்பு படை தலைமை ஆணையர் இப்ராஹிம் ஷெரிப், ரயில்வே எலக்ட்ரிக்கல் பிரிவு அதிகாரிகள் தீயணைப்புத்துறை இணை இயக்குனர் சத்யநாராயணன்
தமிழ்நாடு மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை துரிதிபடுத்தினர்
தீ முழுமையாக அணைக்கப்பட்டு இருப்பதால் தண்டவாள பணிகள் சீரமைக்கப்பட்டு இன்று இரவு அல்லது நாளை காலை இவ்வழிதடத்தில் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும் என ரயில்வே துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,


