திருவள்ளுர் : 18 டேங்கர்கள் தீக்கிரை.. ரூ.12 கோடி மதிப்பிலான டீசம் எரிந்து நாசம்..

 
திருவள்ளுர் ரயில் தீ விபத்து: 18 டேங்கர்கள் தீக்கிரை..  ரூ.12 கோடி மதிப்பிலான டீசம் எரிந்து நாசம்..   திருவள்ளுர் ரயில் தீ விபத்து: 18 டேங்கர்கள் தீக்கிரை..  ரூ.12 கோடி மதிப்பிலான டீசம் எரிந்து நாசம்..  


திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயில் தீ பிடித்து எரிந்ததில், 18 ரயில் பெட்டிகள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.  


திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள  ஏகாட்டூரில், இன்று அதிகாலை 5.20 மணிக்கு டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் சரக்கு ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. ரயில் தடம்புரண்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  டீசல் டேங்கர்கள் கொழுந்துவிட்டு எரிவதால் வானுயர புகை எழுந்து காட்சியளிக்கிறது.  விண்ணை முட்டும் அளவுக்கு புகை மண்டலமாக காட்சியளிப்பதால், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியை சுற்றியுள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.  திருவள்ளூர் இருளர் காலணி, வரதராஜபுரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

திருவள்ளுர் ரயில் தீ விபத்து: 18 டேங்கர்கள் தீக்கிரை..  ரூ.12 கோடி மதிப்பிலான டீசம் எரிந்து நாசம்..  

 மேலும், தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என ஆட்சியர் பிரதாப் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. கேட்டுக்கொண்டுள்ளனர்.  5 மணி நேரத்திற்கும் மேலாக தீ கொளுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில்,  தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடபெற்று வருகிறது.  வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தீயை அணைப்பது தீயணைப்பு வீரர்களுக்கு சவாலாக உள்ளது.  மொத்தமாக 52 டேங்கர்களை ஏற்றி வந்த நிலையில், 18 டேங்கர்கள்   முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. 5 டேங்கர்கள் பாதுகாப்பாக  அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.   70 சதவீதம்  தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும்,அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக  தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும்    தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. 

திருவள்ளுர் ரயில் தீ விபத்து: 18 டேங்கர்கள் தீக்கிரை..  ரூ.12 கோடி மதிப்பிலான டீசம் எரிந்து நாசம்..  

டீசல் டேங்கர்கள் என்பதால் வெறும் தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்க முடியாது. ஆகையால் வழக்கமாக தீயணைப்புத்துறையினர் பயன்படுத்தும் ஃபோம் கொண்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது. கைவசம் இருந்த ஃபோம்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டு விட்டதால், தனியாரிடம் இருந்து ஃபோம்கள் பெறப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது.  ஒரு டேங்கரில் 70,000 லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்த நிலையில்,  இந்த தீ விபத்தில் 18 டேங்கர்களில் இருந்த 12.6 லட்சம் லிட்டர் டீசல் தீக்கிரையானதாகவும்,  இதுவரை ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.