திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது!
Updated: Dec 3, 2025, 18:05 IST1764765338640
பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர திருவண்ணாமலை 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திரு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24
ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் திருக்கார்த்திகை தீபவிழாவின் 10 ஆம் நாளான இன்று காலை அண்ணாமலையார் சன்னதியில் ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக அண்ணாமலையார் கருவறையின் முன்பு காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பின்னர் 6 மணியளவில் சுமார் 2668 அடி உயரமுள்ள மலையின் மீது 5 3/4 அடி உயரம் கொண்ட கொப்பறையில் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கப்பட்ட 3500 கிலோ நெய் நிரப்பட்டு 1500 மீட்டர் காடா துணியை திரியாக அமைத்து பர்வதராஜ குலத்தினர் சார்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது.


