ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!

 
assembly assembly

தமிழகத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க , வரும் 14ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

MKstalin

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி காலை 11  மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில்  நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தவிர்த்து பல்வேறு முதலீடுகள் மற்றும் சலுகைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.