பாஜக தனித்து போட்டியிடுவது புதிதல்ல - கேஎசவ விநாயகம் பேச்சு

 
கேசவ விநாயகம்

தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடுவது ஒன்றும் புதிதல்ல என தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் கூறியுள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், இதன் எதிரொலியாக பாஜக-அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டடது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனிமேல் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை எனவும் அதிமுக அறிவித்தது.. நாடாளுமன்றம் மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். கூட்டணி முறிவு தொடர்பாக அவர் தேசிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. 

BJP Meeting

இந்த நிலையில், பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டத்திற்கு வர தாமதமான நிலையில், அவர் இல்லாமலேயே கூட்டம் தொடங்கியது.  சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பாஜக பல முறை தனித்து போட்டியிட்டுள்ளது. தனித்து போட்டியிடுவது புதிதல்ல. நாம் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். மாவட்ட தலைவர்களை டெல்லி தலைமை கண்காணித்து கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறினார்.