அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சிகள் ; மாணவிகளுக்கு உயர்கல்வி பயில ரூ.1,000 உதவித்தொகை!!

 
tn

 2022 -23 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். திமுக பொறுப்பேற்று ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முதல் முறையாக முழு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் 8 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நிதி வருவாய் பற்றாக்குறை குறைகிறது,  உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் மூலம்  பத்து லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது உள்ளிட்ட தகவல்களை தெரிவித்தார்.

tn

ஜி.எஸ்.டி இழப்பீடு நடைமுறையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்று பட்ஜெட்டில் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அத்துடன் பட்ஜெட் உரையில் துறைவாரியான  முக்கிய அறிவிப்புகள் இதோ:-

#சமூக வலைதள பொய் பரப்புரைகளை தடுக்க காவல்துறையில் சமூக ஊடக சிறப்பு மையம்!

#சென்னைக்கு அருகே ரூ.200 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்; தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற அமைப்பை அரசு உருவாக்கும்!

#தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு! 

#தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு செய்யப்படும்; தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு!

#விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அருங்காட்சியகம்!.

 #₹125 கோடி செலவில் புதிய நூலகங்கள் அமைக்கப்படும்

#காவல்துறைக்கு ₹10,285 கோடி நிதி

#19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ரூ.1019 கோடி செலவில் புதிய மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும்

schools open

கல்வித்துறை:-

#பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு

#இல்லம் தேடிக் கல்வி திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது, அதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு;

#அரசுப்பள்ளிகள் தவிர பிற பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு

#பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது

#அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும்

#சமூதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது; புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சிகள் நடத்தப்படும். ஆண்டுக்கு 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும் 

#15 மாவட்டங்களில் முன் மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும், அதற்காக ரூ.125 கோடி நிதிஒதுக்கீடு; அறிவு சார் நகரம் உருவாக்கப்படும், ஆராய்ச்சிப் பூங்கா நிறுவ ஊக்குவிக்கப்படும்

student

உயர்கல்வித்துறை :

#அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் . அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ₹1000 வழங்கப்படும்
 

#அரசு கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது அரசின் கடமை; அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம்

#நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களின் தனித்திறன் அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படும்; அதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு

#இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க, இளநிலை படிப்புகளுக்கான முழு செலவை அரசே ஏற்கும்.

agri

விவசாயம் :-

#நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ. 2787 கோடியும், பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

#குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,694 கிமீ கால்வாய்களை தூர் வார ஒப்புதல்; வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு

#பாசனத்திற்கான நீரை தங்குதடை இன்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காகவும் ரூ.3,384 கோடி ஒதுகீடு

வனத்துறை:-

#வனத்துறை பரப்பளவை அதிகரிக்க வன ஆணையம் அமைக்கப்படும் 

govt

விளையாட்டுத்துறை :-

#தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு; வடசென்னையின் ஆர்.கே.நகர் தொகுதியில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.

#தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு; 

#வட சென்னையில் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கைப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்டவைகளுக்காக சென்னை ஆர்.கே நகரில் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் செலவில் வளாகம் அமைக்கப்படும்