லாலு பிரசாத் யாதவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

 
stalin stalin

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் இன்று தனது 76வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி லாலு பிரசாத் யாதவுக்கு தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லாலு பிரசாத் யாதவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மூத்த அரசியல் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.கண்ணியத்திற்கு அவர் கொடுத்த முக்கியத்துவம், தந்தை பெரியாரால் வழிநடத்தப்பட்ட நமது சுயமரியாதை இயக்கத்தின் அரசியலுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு ஆகட்டும், சாதிவாரி கணக்கெடுப்புக்காக குரல் எழுப்புவது ஆகட்டும் அல்லது மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவது போன்றவற்றில் லாலு பிரசாத் யாதவின் உறுதியான நிலைப்பாடு அவரை சமூக நீதியின் அசைக்க முடியாத போராளியாக மாற்றியுள்ளது. அவரது 76 வது பிறந்தநாளில், வட இந்தியாவில் மண்டல் அரசியலை வலுப்படுத்த மக்கள் சேவையில் இன்னும் பல ஆண்டுகள் சுறுசுறுப்பாக இருக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.