குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
stalin murmu

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.

சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்து  திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.  மறைந்த  முன்னாள் முதலமைச்சரும் , முன்னாள் திமுக தலைவருமான கலைஞர்  கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்திலும்  கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுப்பதற்காக  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பிக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.  

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கிண்டியில் அமையவுள்ள 'கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை' திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார்.