இந்திரா காந்தியின் 107வது பிறந்த நாள் - தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 107வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அன்னை இந்திரா காந்தி அவர்களின் 107-வது பிறந்த நாளான இன்று நாகர்கோவிலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கும் திருவுருவப்படத்திற்கும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு.செல்வபெருந்தகை MLA அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அன்னை இந்திரா காந்தி அவர்களின் 107-வது பிறந்த நாளான இன்று நாகர்கோவிலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கும் திருவுருவப்படத்திற்கும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு.செல்வபெருந்தகை MLA அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை… pic.twitter.com/opMvkHBziZ
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) November 19, 2024
இந்நிகழ்வில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு ராஜேஷ்குமார் MLA கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு விஜய் வசந்த் MP விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருமிகு தாரகை கட்பட் MLA மாவட்ட தலைவர்கள் திரு கே.டி.உதயம், திரு நவீன் குமார், திரு பினுலால் சிங், மாநில மாவட்ட நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.