செல்வப்பெருந்தகைக்கு எதிராக கட்சியினர் போர்க்கொடி! மாற்றக்கோரி புகார் மனு!

 
selvaperunthagai selvaperunthagai

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை மாற்ற கோரி டெல்லியில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரை சந்தித்து 20க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் புகார் மனு அளித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தற்போது செல்வப்பெருந்தகை செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், செல்வப்பெருந்தகையின் செயல்பாடு பிடிக்காமல் அக்கட்சியினர் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர் மீதான அதிருப்தி காரணமாக செல்வப்பெருந்தகையை மாற்ற வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை மாற்றக் கோரி டெல்லியில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரை சந்தித்து 20க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் புகார் மனு அளித்தனர்.

அதிருப்தி நிர்வாகிகள் ஏராளமானோர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் கோட்டாங்கரை சந்தித்து புகார் மனு அளித்தனர். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.