செல்வப்பெருந்தகையை நீக்குங்கள்...! பிரியங்கா காந்தியிடம் அதிருப்தி நிர்வாகிகள் முறையீடு!

 
Tn Tn

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை மாற்ற கோரி பிரியங்கா காந்தியை சந்தித்து அதிருப்தி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப்பெருந்தகை செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், செல்வப்பெருந்தகை மீது கட்சி நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகள் பிடிக்காமல் அவருக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கடந்த் 2 தினங்களுக்கு முன் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்து, செல்வப்பெருந்தகையை தலைவர் பதவியில் இருந்து நீக்க கோரி புகார் அளித்தனர். 
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை மாற்ற கோரி பிரியங்கா காந்தியை சந்தித்து தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். செல்வப்பெருந்தகை, ஒரு முறை கூட மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை கூட்டவில்லை. மாவட்ட தலைவர்களை மதிப்பதில்லை, தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டியுள்ளனர். காங்கிரஸ் கமிட்டியின் விதிமுறைகளுக்கு முரணாக செயல்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ள அவர்கள், செல்வப்பெருந்தகையை மாற்றி புதிய தலைவரை நியமிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.