அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்கு புத்துயிரூட்டி, பெரிதும் வளப்படுத்தினார் - ஆளுநர் பேச்சு!

 
ravi

அய்யா வைகுண்டர் சமூக பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடி, விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதியை உறுதி செய்தார் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

ஆளுநர் ரவி அவர்கள், மகான் அய்யா வைகுண்டர் அவதார தினத்தின் 192வது பிறந்தநாளை  கொண்டாடும் நிகழ்வில், சனாதன தர்மத்தை அதை அழிக்க சதி செய்தவர்களிடமிருந்து பாதுகாப்பதில் அய்யா வைகுண்டர் வழங்கிய ஆழமான பங்களிப்பை நினைவுகூர்ந்தார். அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்கு புத்துயிரூட்டி, பெரிதும் வளப்படுத்தினார். சமூக பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடி, விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதியை உறுதி செய்தார். 


அவர் கொண்டிருந்த பார்வை, அனைவருக்கும் சமமான நலத்திட்ட அணுகலையும் திட்டங்கள் அனைவருக்குமானது என ஒருவரைக் கூட விட்டு விடாமல் உறுதிப்படுத்தும் #பிரதமர்மோடி தலைமையிலான அனைவரையும் உள்ளடக்கிய பாரதத்தில் உயிர்ப்புடன் விளங்கி #சப்காசாத்சப்காவிகாஸ் என்ற அனைவருடனும் அனைவரின் நலனுக்காகவும் என்ற  உள்ளடக்கிய வளர்ச்சி மாடலில் பிரதிபலிக்கிறது.