பிளாஸ்டிக் தடையை அமைல்படுத்த இயலாது - தமிழக அரசு தகவல்

 
assembly

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக வேறு பொருட்கள் இல்லாததால், தடையை முழு அளவில் அமைல்படுத்த இயலாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள தமிழக அரசு பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக வேறு பொருட்கள் இல்லாததால், தடையை முழு அளவில் அமைல்படுத்த இயலாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.  பால், எண்ணெய் போன்ற பொருட்கள் பிளாஸ்டிக் உறையில் விற்கப்படுவதால் மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

high court

கடந்த 2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முழுவதுமாக அமல்படுத்த சாத்தியமில்லாததால், மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.  மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையான தடை விதித்தால், உள்ளூர் தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை பாதிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தொழிற்துறை செயலாளர் உள்ளிட்டோர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய வழக்குகள் வரும் ஜூன் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.