தமிழ்நாடு காவல் துறை வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

 
cm stalin

காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு காவல் துறை வீரர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (16.8.2023) தலைமைச் செயலகத்தில், கனடா நாட்டின் வின்னிபெக்கு நகரில் நடைபெற்ற “காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்- 2023' போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு காவல் துறை வீரர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், கனடா நாட்டின் வின்னிபெக்கு நகரில் 27.07.2023 முதல் 6.08.2023 வரை நடைபெற்றது. இப்போட்டிகளில், சுமார் 50 நாடுகளிலிருந்து 8,500-க்கும் அதிகமான காவல் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் கலந்து கொண்டனர்.

stalin

இதில், தமிழ்நாடு காவல் துறை தடகள் அணியைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. மயில்வாகனன், காவல் ஆய்வாளர்கள் இராஜேஸ்வரி, திரு. எஸ். சரவணப் பிரபு, திரு. கே. கலைச்செல்வன், திரு. ஆர். சாம் சுந்தர், திரு. என்.விமல் குமார், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள் திரு.வி. கிருஷ்ணமூர்த்தி, திரு. கே. பாலு, திரு. பி. சந்துரு, திரு. எஸ். சுரேஷ் குமார், திரு. சி. யுவராஜ், திரு. டி. தேவராஜன், மகளிர் தலைமை காவலர்கள் எம். லீலாஸ்ரீ, ஆர். பிரமிளா, டி. தமிழரசி ஆகிய 15 பேர் பல்வேறு போட்டிகளில் பொதுப்பிரிவில் பங்கேற்று, 15 தங்கம், 11 வெள்ளி மற்றும் 15 வெண்கலம், என மொத்தம் 41 பதக்கங்களை வென்றுள்ளனர். இதுவே தமிழ்நாடு காவல் துறை தடகள் அணி ஓராண்டில் வென்ற அதிகபட்ச பதக்கங்களாகும். இவ்வீரர்கள், அரசின் அனுமதி பெற்று, தங்கள் சொந்த செலவில் இப்போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். பதக்கங்கள் வென்ற 15 காவல் துறையினர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து இன்று வாழ்த்துப் பெற்றனர்.

mk stalin

“காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்-2023' போட்டியில், அகில இந்திய காவல் துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட திரு. எஸ். சிவா, திரு. ஆர். தினேஷ், வி. தினேஷ், திரு.ஜி.எஸ். ஸ்ரீது ஆகிய 4 காவலர்கள் 5 தங்கம் மற்றும் 7 வெள்ளி, என 12 பதக்கங்களை வென்றுள்ளனர். பதக்கங்கள் வென்ற காவலர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து இன்று வாழ்த்துப் பெற்றனர்.