தகுதியற்ற குடியிருப்புகளை இடித்துவிட்டு, மாற்று குடியிருப்புகள் கட்டப்படும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

 
tn

பட்ஜெட் மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. அதில் துறைவாரியாக சட்டமன்ற எம்எல்ஏக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் தொடர்ந்து பதிலளித்து வருகின்றனர். 


கேள்வி :-  சேந்தமங்கலம் தொகுதியில் உள்ள 5 பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் வீட்டுவசதி வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர அரசு முன்வர வேண்டும் - சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி  

அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில்:- தொகுதியின் சூழலை ஆய்வு செய்து தேவை இருந்தால் வீடு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்கும்; பல வீடுகள் பல ஆண்டுகளாக காலியாக இருக்கும் சூழலும் காணப்படுகிறது.  தமிழ்நாடு முழுவதும், தகுதியற்ற நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை இடித்துவிட்டு, மாற்று குடியிருப்புகள் கட்டப்படும்

tn
கேள்வி :-
அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பெரும்பாலான மாணவர்கள் ஆந்திர மாநிலத்திற்கு சென்று சட்டம் பயின்று வருவதால், அரக்கோணம் தொகுதியிலேயே சட்டக்கல்லூரி அமைத்துத்தர வேண்டும் - அரக்கோணம் எம்எல்ஏ ரவி

அமைச்சர் ரகுபதி  பதில் : - புதிய சட்டக் கல்லூரியை வாடகைக்கட்டடத்தில் துவங்க ரூ.2.75 கோடி பணம், நிலம் உள்ளிட்டவை தேவைப்படுவதால் மாநிலத்தில் புதிய சட்டக்கல்லூரி தொடங்கும் முடிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது; இப்போதைக்கு புதிதாக சட்டக்கல்லூரி துவங்க முடியாது 

tn


கேள்வி : - விளாத்திகுளம் வருவாய் வட்டத்தைப் பிரித்து, புதூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும் - விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில் : - அமைச்சராக இருந்தாலும் நானும் ஓர் எம்எல்ஏதான்; அவர்களின் கோரிக்கைகள் எனக்கும் புரிகிறது. எம்எல்ஏக்கள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று பேரவை முடிவதற்குள் உரிய நடவடிக்கை எடுப்பேன் 

tn

ஆதரவற்றோர் இல்லம், மறுவாழ்வு இல்லங்கள் அமைக்க தொண்டு நிறுவனங்கள் முன்வந்தால், அவற்றுக்கு அரசு துணை நிற்கும் - சமூக நலன் & மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்

பெரம்பலூர் தொகுதி தேனூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைத்துத்தர வேண்டும் -பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன்

தினசரி சிகிச்சைக்கு வரும் கால்நடைகளின் எண்ணிக்கை 40-க்கு மேல் இருப்பின் அங்கு கால்நடை மருத்துவமனை அமைத்துத் தரப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்