"ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்" - பட்ஜெட்டின் பல முக்கிய அறிவிப்புகள் இதோ!!

 
tn

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியை பிடித்த பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று  நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது .

#உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும் - 50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.15 கோடியும்,  புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க 10 கோடியும் ஒதுக்கீடு 

#பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.150 கோடி நிதி

#முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகளுக்கு ரூ.65.34 கோடி நிதி

#145 சூரிய சக்தி உலர்த்திகளுக்கு ரூ.3 கோடி

#ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்

tn

#விளை நிலங்களில் ட்ரோன் மூலம் பூச்சிமருந்துகள் தெளிக்க நடவடிக்கை - கிராம நிலங்களுக்கு புவியிடக்குறியீடு, புதிய பயிர்த் திட்டத்திற்கான பரிந்துரை, பூச்சி மற்றும் நோய்களுக்கான செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி

#உற்பத்தி முதல் விற்பனை வரை சேவைகளை,  விதை முதல் விளைச்சல் வரை தொழில்நுட்பங்களை முழுமையாக ஆன்லைன் முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை

#இயற்கை வேளாண்மை, இடுபொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.71 கோடி மதிப்பில் மாநில வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம்

#50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ₹15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ₹10 கோடி ஒதுக்கீடு

#சென்னை, திருச்சியில் நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க ₹15 கோடி ஒதுக்கீடு

tn

#கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 3,204 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.

#பயிர்காப்பீடு திட்டத்திற்கு ரூ.2,339 கோடி ஒதுக்கீடு

#தஞ்சை, சேலம், திருவள்ளூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சோயா பீன்ஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை

#மரம் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.12 கோடி 

#விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் பனை மரக்கன்றுகள் வழங்கப்படும் 

#பனை மேம்பாட்டிற்காக ரூ.2.65 கோடி ஒதுக்கீடு. 

tomato

#தக்காளி விலையை சீராக்க உற்பத்தி குறைவாக உள்ள மாதங்களில், உற்பத்தியை அதிகரிக்க மானியம் வழங்கப்படும் 

#₹8000 மானியத்தில் இடுபொருட்கள் தக்காளி விவசாயிகளுக்கு வழங்கப்படும்

#கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ₹195 வழங்கப்படும்; கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ₹2950

#கரும்பு சாகுபடிக்கு உதவியாக ₹10 கோடியில் உபகரணங்கள் வழங்கும் திட்டம்

#மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க, விவசாயிகளின்  கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும்

#தேனீ வளர்ப்பு தொகுப்புகளுக்கு ரூ.10.25 கோடி; உழவர் சந்தைகளின் காய்கனிகளின் வரத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டத்திற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

karumbu
#தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.30 கோடி

#தென்னை, மா, கொய்யா மற்றும் வாழை தோட்டங்களில் ஊடுபயிருக்காக ரூ.27.51 கோடி

#திண்டிவனம், தேனி, மணப்பாறையில் பிரமாண்ட உணவுப்பூங்கா அமைக்கப்படும்

#தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்த காய்கறி விற்பனை மையங்கள் அமைக்கப்படும்

#அண்டை மாநில வணிகர்கள் இங்கு நேரடியாக கொள்முதல் செய்ய வசதி ஏற்படுத்தப்படும்