#TNBudget: இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வீடு கட்ட ரூ. 223 கோடி ஒதுக்கீடு..

 
இலங்கை தமிழர்கள்

 தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2023 - 24 ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  தாக்கல் செய்கிறார். இதில் தமிழ் வளர்ச்சி துறைக்கான அறிவிப்புகளை பார்க்கலாம்..

*இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக உயிர் நீத்த நடராஜன், தாளமுத்து இருவருக்கும் சென்னையில் நினைவிடம்

*அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

*சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படும்

*நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ₹11 கோடி ஒதுக்கீடு

PTR

*வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம்

*தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும்

*தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்

*முன்னாள் படைவீரர்கள் நலன்:  போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ₹20 லட்சம் நிதியுதவி ₹40 லட்சமாக அதிகரிப்பு

*இலங்கை மறுவாழ்வு முகாம்களில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட வரும் நிதியாண்டில் ₹223 கோடி ஒதுக்கீடு