#TNBudget2023: காலை உணவு திட்டத்திற்கு ரூ. 500 கோடி.. குடிமைப்பணித் தேர்வர்களுக்கு உதவித்தொகை..

 
#TNBudget2023: காலை உணவு திட்டத்திற்கு ரூ. 500 கோடி.. குடிமைப்பணித் தேர்வர்களுக்கு உதவித்தொகை..

 தமிழ்நாடு பட்ஜெட்டில் பள்ளிகல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உயர்க்கல்வித்துறைக்கு  ரூ. கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..  

*பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ₹200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்

*54 அரசு ஐ.டி.ஐ.க்கள் ரூ. 2,783 கோடி செலவில்  திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும்

*கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் வளாகத்தில் ₹80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்

*ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும்; இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும்

#TNBudget2023: காலை உணவு திட்டத்திற்கு ரூ. 500 கோடி.. குடிமைப்பணித் தேர்வர்களுக்கு உதவித்தொகை..

*ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு உதவித்தொகை! முதல்நிலை தேர்வுக்கு தயாராக மாதம் ரூ. 7,500, முதன்மைத் தேர்வுக்கு ரூ. 25,000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு..  

*முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு.  அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் இந்தத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.  இத்திட்டத்தின் மூலம்  தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

*இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்

*மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவுன் நூலம் வரும் ஜூன் மாதம் திறக்கப்படும்...

*ரூ. 2,877 கோடி செலவில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன் மையங்களாக மாற்றப்படும். வரும் கல்வியாண்டிலேயே  புதிய பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்..

*ரூ. 120 கோடி செலவில் சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் (TN-WISH) அமைக்கப்படும்..