#TNBudget2023 - செப்.15 முதல் மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை..

 
 மகளிருக்கு மாதம் ரூ.1000

 மகளிர் உரிமைத்தொகை தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும்  என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

2023 - 24 ஆம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசித்து வருகிறார். இதில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட  மகளிர் உரிமைத்தொகை அறிவிப்பு மீது அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது, அந்தவகையில்,மகளிர் உரிமைத்தொகை தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும்  என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும். தமிழ்நாடு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய   திட்டத்திஒற்காக ரூ. 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவை

நாட்டிலேயே நேரடி மானியமாக அதிக நிதி வழங்கும் திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கும் என்றும், குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று தெரிவித்தார். மேலும், சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும்  என்று பட்ஜெட் உரையில்  நிதுயமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.