#TNBudget2023: இந்த மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள்.. 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு..

 
வேலைவாய்ப்பு


தொழில்வளர்ச்சி மற்றும்  இளைஞர் நலன், வேலைவாய்ப்புகளை அதிகரிக்க 2023 - 24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். அதில், “

பிற்படுத்தப்பட்ட  மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்காக ரூ. 1,44, 028  கோடி செலவில்,  2,14,478 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு..  

தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது; உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும்

விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.  இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

தமிழக அரசு

கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின் வாகனங்களில் 46% வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்

விருதுநகரில் ₹1,800 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா ஒன்றிய, மாநில அரசுகள் நிதி பங்களிப்புடன் அமைக்கப்படும்

சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும்

ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் தலா 1 லட்சம் சதுரடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.