#TNBudget2023: மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம்.. மருத்துவ துறைக்கு ₹18,661 கோடி ஒதுக்கீடு

 
மாற்றுத்திறனாளிகள்


சென்னை கிண்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பன்னோக்கு மருத்துவமனை  இந்த ஆண்டே திறக்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராகன் அறிவித்துள்ளார்.  


*தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₹18,661 கோடி ஒதுக்கீடு

*சென்னை கிண்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பன்னோக்கு மருத்துவமனை  இந்த ஆண்டே திறக்கப்படும்..

*சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய பன்னோக்கு மருத்துவப்பிரிவு புதியதாக அமைக்கப்படும்.   

ptr

*பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உடகட்டமைப்பை  மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு..   

* தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவு செய்யப்படும்

* மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ₹1500 ஆக அதிகரிப்பு

* கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ₹2000 ஆக அதிகரிப்பு