#TNBudget2023: ரூ.1000 கோடி செலவில் வடசென்னை வளர்ச்சி திட்டம்..

 
#TNBudget2023: ரூ.1000 கோடி செலவில் வடசென்னை வளர்ச்சி திட்டம்..

தமிழக பட்ஜெட்டில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்,  ஊரக வளர்ச்சித்துறைக்கென பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளனர்.  அது தொடர்பான அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை பார்க்கலாம்..  

*கோவையில் ரூ. 172 கோடி மதிப்பில் உலகத்துவம் வாய்ந்த ‘செம்மொழிப் பூங்கா’ 2 கட்டங்களாக அமைக்கப்படும். முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.  

*அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் அரசு -  தனியார் பங்களிப்புடன் ரூ. 1500 கோடி செலவில் அமைக்கப்படும்

*ஈரோடு மாவட்டத்தில் புதிதாக ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ அமைக்கப்படும் . இது மாநிலத்தின் 18வது சரணாலயமாக இருக்கும்..  

*பறவைகளின் பாதுகாப்பை பேணவும், ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மரக்காணத்தில் ரூ. 25 கோடி மதிப்பில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்..  

#TNBudget2023: ரூ.1000 கோடி செலவில் வடசென்னை வளர்ச்சி திட்டம்..

*கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும்

*சென்னையில் ₹320 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு, நீர் வழித்தட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்

* சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ₹20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்

*சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி சாலையாக மேம்பாலம் கட்டப்படும் - சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும்

அடையாறு

*வட சென்னை வளர்ச்சித்திட்டம் ₹1000 கோடி செலவில் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்

*ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டப்  பணிகள் ரூ. 7,145 கோடி  செலவில் செயல்படுத்த பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவிக்காக முன்மொழியப்படும்..

*சென்னை தீவுத்திடலில்  30 ஏக்கர் நிலப்பரப்பில்  ரூ. 50 கோடி செலவில்,  இயற்கை வனப்புடம் நகர்ப்புற பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் அமைக்கப்படும்..