#TNBudget2023 : மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹30,000 கோடி கடன் வழங்க இலக்கு..

 
மகளிர் சுய உதவிக்குழு
 தமிழக பட்ஜெட்டில் மகளிருக்கான  திட்டம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அது தொடர்பான அறிவிப்புகள் இதோ..

*மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம்..

*புதுமைப்பெண் திட்டத்தில் மாதம்  ரூ. 1000 வழங்கப்படுவதால் உயர்க்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்னிக்கை 29% அதிகரித்துள்ளது.  

*சென்னையில் உள்ள  ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் ₹25 கோடி செலவில் மேம்படுத்தப்படும்!

*பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மானியத்திற்காக ₹10,500 கோடி ஒதுக்கீடு

*மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ₹320 கோடி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்

*மதுரை கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி நீலகிரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான்கு புதிய விருதுகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும் அதற்காக 100 கோடி ரூபாய்  நிதி ஒதுக்கீடு..

*ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டம் செவ்வனே செயல்படுத்தப்பத்த ஒரு சிறப்பு சட்டத்தை இந்த அரசு இயற்றும். அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான சட்டம் முன் வடிவு அறிமுகப்படுத்தப்படும்..

*ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வண்ணம், ₹100 கோடி செலவில்  ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்’செயல்படுத்தப்படும்..

*‘அயோத்திதாச ண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம்’ ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்யப்படும். வரும் 5 ஆண்டுகளில் ₹1000 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்..