சிறுவன் அப்துல்கலாம் குடும்பத்துக்கு வீடு வழங்கியது தமிழக அரசு !!

 
tn

மனிதநேயம் மதம் தாண்டி ஒற்றுமை குறித்து பேசிய பள்ளி மாணவர் அப்துல் கலாம் குடும்பத்திற்கு தற்போது தமிழக அரசு சார்பில் வீடு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இணையத்தளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த பள்ளி மாணவர் அப்துல்கலாம் மனிதநேயம் குறித்து பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பள்ளி மாணவர் அப்துல் கலாமை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.  மாணவருடன்  அவரது பெற்றோரும் உடன் வந்திருந்த நிலையில்,  வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி வலியுறுத்தியதாகவும் ,அரசு சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர், அவர்களின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கவேண்டும் என்று அத்துறையின் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உத்தரவிட்டிருந்தார்.

tn

இதன் அடிப்படையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மாணவர் அப்துல் கலாமை நேரில் அழைத்து இந்த திட்ட பகுதியில் வீடு ஒதுக்கவேண்டும் என்று கேட்டறிந்தார். அத்துடன் ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்யும்படி அவர் அத்துறை சார்ந்த அலுவலர்களையும் கேட்டுக்கொண்டார். 

tn

இந்நிலையில் சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்துக்கு சென்னை கே.கே. நகர் சிவலிங்கபுரத்தில் தமிழக அரசு வீடு வழங்கியுள்ளது.  வீட்டை காலி செய்ய உரிமையாளர் கூறிய நிலையில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிறுவன் அப்துல் கலாமுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை தரப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் வீடு வழங்கப்பட்டதற்கு அப்துல் கலாம் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.