தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் செட் டாப் பாக்ஸ்கள் வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு!!

 
rn

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 4.10.2007 அன்று அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் துவக்கப்பட்ட நிறுவனமாகும். இந்நிறுவனம் தனது சேவையை தொடங்குவதற்கு முன்னர் ஒரு சில தனியார் நிறுவனங்கள் கேபிள் தொழில் ஆதிக்கம் செலுத்தி வந்த தோடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அதிக அளவு கட்டணத்தை வசூலித்து வந்தன.

தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புதிய தலைவராக குறிஞ்சி சிவகுமார் நியமனம்!

இந்த குறைபாட்டினை களையும் பொருட்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளை பொது மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு சேவைகளை பொது மக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக அரசு இ-சேவை மையங்களை நிறுவி அதன் மூலம், இணைய சேவைகளையும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிறப்பான முறையில் வழங்கி வருகிறது.

tn

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் செட் டாப் பாக்ஸ்கள் வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் புதிய செட்டாப்பாக்ஸ்கள் ( HD, SD, Android ) வழங்குவதற்காக உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் தங்களுடைய செட்டாப்பாக்ஸ் தேவைகளை www.tactv.in என்ற இணையதளத்தில் (Online ) தங்களுடைய உள்நுழைவு ( Login) மூலம் 31.08.2023 முன்பாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு செட்டாப்பாக்ஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்." என்று தெரிவித்துள்ளது.