மஞ்சுவிரட்டு நடத்த தமிழக அரசு அனுமதி - அரசாணை வெளியீடு!

 
tn govt

மஞ்சுவிரட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொங்கல் விழா மற்றும் எதிர்வரும் காலங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ,எருது விடும் விழா போன்ற நிகழ்வுகள் நடத்துவதற்கு தமிழக அரசின் அனுமதி பெற்று,  அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரே அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசால் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

jalli

இந்த சூழலில் வருகிற 7ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது.  முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த தற்போது தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

tn

முன்னதாக திருப்புத்தூர் அருகே உள்ள குமாரபேட்டை, வைரவன்பட்டி, ஆத்தங்குடி, சென்னல் குடிபட்டி,  திருமுக்கனிபட்டி ஆகிய ஐந்து ஊர் நாடார்கள் இணைந்து குமாரபேட்டை பூமலைச்சி அம்மன் கோவில் பங்குனி விழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டியை நடத்தினர். இதில் 40 மாடுகள் கலந்து கொண்ட நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.