சாலையோர வியாபாரிகள் நலவாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

 
govt

சாலையோர வியாபாரிகள் தமிழ்நாடு எங்கும் ஆங்காங்கே தங்களின் அன்றாட வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்யும் நோக்கில் பஇயங்கி வருகின்றனர்.  சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கிட்டு அனைத்து வியாபாரிகளுக்கும் முகவரியுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.  அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவச தள்ளு வண்டிகளை வழங்க வேண்டும் , 15 ஆயிரத்தை கூட்டுறவு வங்கி மூலம் வட்டி இல்லா கடனாக செலுத்த வேண்டும்,  சாலையோர  வியாபாரிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட முக்கிய அம்ச கோரிகளை வலியுறுத்தி தமிழ்நாடு எங்கும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

tn govt

இந்த சூழலில் சாலையோர வியாபாரிகளுக்கு தனி நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதுஇது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில் , தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் ஒழுங்குமுறை) சட்டம், 1982 (தமிழ்நாடு சட்டம் 33, 1982) இன் பிரிவு 6 இன் துணைப் பிரிவுகள் (3) மற்றும் (5) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு எண்.11(2)/LE/123(a-2)/2010 பிப்ரவரி 26, 2010 தேதியிட்ட தமிழ்நாடு அரசின் அரசிதழின் சிறப்பு பகுதி II-பிரிவு 2 இன் 2-3 பக்கங்களில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர்  இதன் மூலம் கீழ்கண்ட உறுப்பினர்களை தமிழ்நாடு தெருவோர வியாபாரிகள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களின் தொழிலாளர் நல வாரியத்திற்கு நியமனம் செய்கிறார்.  என்று குறிப்பிட்டுள்ளது.

tn

இந்த வாரியத்தின் தலைவராக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரும் , உறுப்பினர்களாக, தொழிலாளர் நலன், நிதித்துறைச் செயலர்கள், தொழிலாளர் நலத்துறை ஆணையர், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் ஆகியோர் இடம்பெற்றிருப்பர். அத்துடன் பணியாளர் தரப்பிலிருந்து  5 பேரும், தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த 5 பேரும் என மொத்தம் 10 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.